நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா அனைத்து நாடுகளுடன் நட்புணர்வுடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

மலேசியா அனைத்து நாடுகளுடன் நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சுதந்திர நாடான மலேசியா உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்த வேண்டும்.

அதே வேளையில் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் எது சிறந்தது என்பதை தீர்மானிக்க மலேசியாவுக்கு உரிமை உள்ளது.

மலேசியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவில் இருக்க விரும்புகிறது.

குறிப்பாக மற்ற நாடுகளுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதற்கு எந்தக் கட்சியும் அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நான் அண்மையில் அதிபர்  புட்டினைச் சந்தித்தேன். இந்த சந்திப்பால் அமெரிக்கா என்ன சொல்கிறது, ஐரோப்பா என்ன சொல்கிறது என பல கேள்விகள் எழுகின்றன.

மலேசியா சுதந்திரமான நாடு. நமது நாட்டிற்கு எது சிறந்தது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கான பதில் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset