நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக நல இல்லங்களில் ஓரின சேர்க்கையா? ஜிஎஸ்பிஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்: ஐஜிபி ரஸாருடின்

கோலாலம்பூர்:

ஜிஎஸ்பிஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.

இதில் சமூக நல இல்லங்களில் பொறுப்பாளர்களும் அடங்குவர் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

ஓரின சேர்க்கை தொடர்பான கல்வி உட்பட பல விவகாரங்களில்  ஜிஎஸ்பிஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் அதன் சமூக நல இல்லமும் சிக்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு உதவ அனைத்து நபர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும்.

ஒரு வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட 402 பிள்ளைகள் தற்போது போலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.

சுகாதார அமைச்சு, சமூக நலத்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இக் குழந்தைகள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இப் பிள்ளைகளுக்கு உரிய ஆவணங்கள் செய்வதோடு, அவர்களுக்கு  உடல் நலப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset