நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் சான்றிதழ் விவகாரம்: ஜாக்கிம், ஹலால் மேம்பாட்டுக் கழகத்தை தெரேசா சந்தித்தார்

கோலாலம்பூர்:

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் ஜாக்கிம், ஹலால் மேம்பாட்டுக் கழக அதிகாரிகளை சந்தித்தார்.

ஹலால் சான்றிதழ் தொடர்பாக தெரேசா கோக் வெளியிட்ட அறிக்கை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் அவர் மீது போலிஸ் புகார் செய்யப்பட்டது. இதனால் அவரிடம் போலிசார் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜாக்கிம் துணை இயக்குநர் சிராஜூடின் சுஹைமி, ஹலால் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் முஹம்மத் ஜம்ரி ஆகியோரை தெரேசா கோக் சந்தித்து விளக்கமளித்தார்.

பல்வேறு தரப்பினரின் தவறான புரிதலால் இந்த ஹலால் சான்றிதழ் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்த விவகாரத்தில் என் தரப்பு நியாயத்தை விவரித்தேன். இது குறித்து ஜாக்கிம் விளக்கம் அளிப்பது நல்லது என நினைக்கிறேன்.

இந்த ஹலால் சான்றிதழ் முயற்சி தொடர்பான குழுக் கூட்டம் ஒரு நட்பு சூழ்நிலையில் நடத்தப்பட்டது என்று அவர் தெரேசா கோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset