நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டை நேசிக்கும் உணர்வு மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளது: செனட்டர் சரஸ்வதி 

மலாக்கா:

நாட்டை நேசிக்கும் உணர்வு மலேசிய மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

குறிப்பாக வரும் காலத்தில் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கவிருக்கும் இளைஞர்களுக்கிடையே இந்த உணர்வு வலுவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு தேசிய அளவிலான ருக்கூன் நெகாரா இறுதி சுற்று பேச்சு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். 

நாட்டை நேசிக்கும் உணர்வுக்கு ருக்கூன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகள் வழிகாட்டியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மைக்கு ருக்கூன் நெகாரா ஒரு தூணாக விளங்கி வருவதாக அவர் சொன்னார். 

மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு ருக்கூன் நெகாரா அடித்தளமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

ந்நாட்டில் பல இன மக்களிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மைக்கு ருக்கூன் நெகாராவின் கொள்கைகள் திறவுகோலாக விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் நிலைத்தன்மை, வளங்களை வலுப்படுத்த இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே அடிப்படை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். 

இந்நாட்டில் உள்ள பல இன மக்களிடையே இருந்து வரும் ஒற்றுமைக்கு ருக்கூன் நெகாராவின் கோட்பாடுகள் உறுதுணையாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset