நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலிமில் பாரதி இலக்கியத் திருவிழா: தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில் 'கரிகாற்சோழன்' வரலாற்று இலக்கிய மேடை நாடகம்

கூலிம்:

'நல்லதோர் வீணை செய்தே' 11ஆம் பாரதி இலக்கியத் திருவிழாவும் 'கரிகாற்சோழன்' வரலாற்று இலக்கிய மேடை நாடகமும் நடைபெற உள்ளது.

பாரதி இலக்கிய நெஞ்சங்களும் பிரம்மவித்யாரண்யமும் துவான்கு பைனூன் தமிழாய்வியல் துறையும் இணைந்து நடத்தும் 'நல்லதோர் வீணை செய்தே...' எனும் பதினோராம் பாரதி இலக்கியத் திருவிழா, கூலிம் சுங்கை கோப் மலைச்சாரலில் வீற்றிருக்கும் பிரம்மவித்யாரண்யத்தில் எதிர்வரும் 15.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி தொடங்கி மதியம் 2.00வரை நடைபெறவிருக்கிறது.

நாட்டு விடுதலை தொடங்கி தனிமனித விடுதலை வரை மொழிக்காகவும் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் வாழ்நாளை வரமாக்கிய வரகவி பாரதியின் பெருமைகளை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.
 
இந்த நிகழ்வில் பாரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகளில் அடிநாதமாக மிளிரும் பேருண்மைகள் ஆழ்ந்து விவாதிக்கப்படும்.

இவ்விலக்கியத் திருவிழாவில் 'நின்னைச் சரணடைந்தேன்...' எனும் தலைப்பில் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி வாழ்த்துரை வழங்கவிருக்கிறார். மேலும் பாரதி கீர்த்தனைகள், பாரதி கவிச்சாரல், பாரதி பட்டிமன்றம், பாரதி காட்சியும் கானமும், பாரதி ஓரங்க நாடகம் எனப் பல்வேறு ஆக்ககரமான படைப்புகள் கூலிம் சுற்று வட்டார தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, கல்விக் கழக மாணவர்களால் அரங்கேற்றப்படவிருக்கின்றன.

'பாரதியும் நவீனச் சிந்தனையும்' எனும் தலைப்பில் திர்.ம.நவீனின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது. 

தமிழ் நெஞ்சங்கள் இவ்விழாவில் தவறாது கலந்து பாரதி தமிழமுதம் பருக அன்புடன் அழைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தமிழ்மாறன் கேட்டுக் கொண்டுள்ளார் 

நமது பாரதி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு,அன்றைய தினம் மாலை 6.30 தொடங்கி இரவு 9.30 மணி அளவில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் பேராதரவில் மலேசிய தமிழர் கலை மன்றத்தினர் படைக்கும் 'கரிகாற்சோழன்' வரலாற்று இலக்கிய மேடை நாடகம் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநரும் கௌரவச் செயலாளர் மதிப்புமிகு  டத்தோ பா.சகாதேவன் சிறப்பு வருகை புரியவிருக்கின்றார்.

நாட்டின் வடப் பகுதியில் மிக அரிதாக இடம்பெறும் இது போன்ற நாடகத்தை தவறாது கண்பதற்கு அனைவரையும் அழைப்பதாக ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

தொடர்புக்கு, தமிழ்மாறன் 019 5700751

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset