செய்திகள் இந்தியா
மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியாவில் சிக்கிக்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு
புதுடெல்லி:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விசா நீட்டிக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனால் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள் மீண்டும் தங்களது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மேற்காசிய பிராந்திய நிலவரத்தால் பயணத் திட்டத்தை மாற்றியுள்ள இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள், விசா காலத்தை நீட்டிக்க அல்லது இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற விரும்பினால், அருகிலுள்ள வெளிநாட்டு பயணிகள் பிராந்திய பதிவு அலுவலகத்தை அணுகலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகள் அங்கு அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் எத்தனை வெளிநாட்டு பயணிகள் தற்போது உள்ளனா், அவா்களில் எத்தனை போ் விமான ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற விவரம் தெரியவில்லை.
225 விமானங்கள் ரத்து: இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, தில்லியில் 100 விமானங்களும், மும்பையில் 125 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் எனக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
