செய்திகள் மலேசியா
விமான நிலையத்தில் அதிர்ச்சி: பெட்டிக்குள் சியாமாங் குரங்குகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற பெண் கைது
கோலாலம்பூர்:
வனவிலங்கு பாதுகாப்புத் துறை, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பகுதியில் நான்கு சியாமாங் குரங்குகளை சிறிய பெட்டிக்குள் அடைத்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 38 வயதுடைய உள்ளூர் பெண்ணை கைது செய்தனர்.
நேற்று இரவு 10.50 மணியளவில் சந்தேகத்திற்கிடமான பயணப்பையை சோதனையிட்ட போது, அந்த பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கோலாலம்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி பயணம் செய்ய இருந்தார்.
விமான நிலைய பாதுகாப்புப் படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களான சியாமாங் குரங்குகள் மீட்கப்பட்டன. சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக வனவிலங்கு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வன உயிரின பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை வைத்திருப்பது அல்லது கடத்துவது கடுமையான குற்றமாகும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
அரசை கவிழ்க்க சதியா? உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர் சைபுதீன்
March 1, 2026, 10:34 am
