நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி

கோலாலம்பூர்:

கெஅடிலானுக்கு அனுப்பப்பட்ட ஒரு காரணக் கடிதத்திற்கு பதிலளித்ததாக பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி அறிவித்தார்.


இந்த அறிக்கை சிக்கலான விளக்கம் தேவையில்லாமல் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது என்று அவர் விளக்கினார்.

அதாவது கெஅடிலான் டிக்கெட்டில் இல்லாமல் ஜிஇ 16 இல் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை, கட்சியை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பாக கெஅடிலான் விளக்க முயன்ற போது இது நடந்ததாக அவர் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தெரிவித்தார்.

சின் சியூ டெய்லிக்கு அளித்த பேட்டியின் போது தான் கூறிய அறிக்கை உண்மையில் மலாய் மொழியில் நல்ல புலமை உள்ள எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்று ரபிசி கூறினார்.

இந்த அறிக்கையின் அர்த்தம் என்னவென்றால், இந்த பதவிக்காலம் முடியும் வரை அவர் கெடிலான்  உறுப்பினராகவே இருப்பார்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவார்,

ஆனால் அதன் பிறகு தனது சொந்தத் திட்டங்களை உருவாக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset