நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் ரோத்தான் அந் நூரிய்யா பள்ளிவாசலில் நூற்றாண்டு விழாவுடன் 500 குடும்பங்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது

கோலசிலாங்கூர்:

புக்கிட் ரோத்தான் அந் நூரிய்யா பள்ளிவாசலில்  500 குடும்பங்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அப் பள்ளிவாசலின் தலைவர் டத்தோ முஹம்மத் காசிம் அலியா இதனை கூறினார்.

கோல சிலாங்கூர் மஸ்ஜித் அன் நூரியா பள்ளிவாசலை தோற்றுவித்த ஆர் இ முஹம்மது காசிம் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் தலைமையில் நோன்புத் திறப்பு நிகழ்வும் பெருநாள் அன்பளிப்புப் பொருள்கள் விநியோகமும் சுமுகமாக நடைபெற்ற்து.

கோல சிலாங்கூர் வட்டாரத்தில் பிரபலமான அந் நூரிய்யா இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இவ்வாண்டு நூற்றாண்டு விழாவை இந்த பள்ளிவாசல் கொண்டாடுகிறது.

அவ்வகையில் இன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் அன் நூரியா பள்ளிவாசலின் இம்முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கி வருகிறார் என்று பள்ளிவாசலின் தலைவர் டத்தோ ஹாஜி காசிம் அலியா தெரிவித்தார்.

இவ்வாண்டு கிட்டத்தட்ட 500 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நோன்பு காலத்தில் வசதிக் குறைந்த மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

வரும் காலங்களில் இன்னும் 
அதிகமானோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளியின் நூற்றாண்டு விழாவில் ஏறக்குறைய 1500 பேர் நோன்பு திறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset