நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?

கோலாலம்பூர்: 

அமெரிக்கா – ஈரான் இடையிலான தற்போதைய யுத்த நிலையினால், எண்ணெய் விலை உயர்வில் உருவாகும் அபாயக் கட்டணம், மலேசியா பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் வழங்கல் பாதிக்கப்படாத நிலையிலும், நிச்சயமற்ற சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரக்கூடும் என்று நிபுணர்கள் விளக்கினார். 

எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கும் மலேசியா, பெட்ரோனாஸ் மூலம் அதிக ஏற்றுமதி வருவாய், வர்த்தக சமநிலையின் மேம்பாடு ஆகியவற்றை பெறக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் தேசிய நாணயத்துக்கும் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், எண்ணெய் விலை உயர்வது, உள்நாட்டு செலவுகளை அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்தனர். எரிபொருள் விலை நிர்ணயம், போக்குவரத்து, விமான சேவை, பெட்ரோவேதியத் துறைகள் கூடுதல் செயல்பாட்டு செலவுகளை சந்திக்க நேரிடலாம். இதனால் பணவீக்க அழுத்தம் அதிகரித்து, பொருளாதார கொள்கைகளில் சவால்கள் உருவாகலாம்.

இந்த சூழல் மலேசியா மத்திய வங்கி பணவியல் கொள்கையிலும் எச்சரிக்கையான அணுகுமுறையை உருவாக்கக்கூடும். பங்குச் சந்தை நோக்கில், எரிசக்தித் துறை பங்குகள் லாபம் பெறக்கூடும்; ஆனால் விமானம், போக்குவரத்து, உற்பத்தி, அவசியமற்ற நுகர்வுப் பொருள் துறைகள் லாப அழுத்தத்தை எதிர்கொள்ளலாம். இது புர்சா மலேசியா சந்தையில் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset