செய்திகள் மலேசியா
அரசை கவிழ்க்க சதியா? உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர் சைபுதீன்
பாச்சோக்:
அரசை கவிழ்க்க முயன்றதாகவும், நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கச் சதி நடந்ததாகவும் எழுந்த புகார்களைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் சைஃபுத்தீன் நசுதியான் இஸ்மாயில், இந்த விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என கூறினார். பெறப்படும் எந்தப் புகாராக இருந்தாலும், காவல்துறையினர் அதற்கு முன்னுரிமை அளித்து விசாரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
புகார்களின் அடிப்படையில் எந்த சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட வேண்டும், சதி நோக்கம் என்ன என்பதனை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விசாரணையின் திசை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புஸ்பென் பாச்சோக் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார். இந்த நிகழ்ச்சியில் மலேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை தலைமை இயக்குநரும் கலந்து கொண்டார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 10:34 am
