நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்

ரந்தாவ்:

நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

முன்னாள் மேலவை உறுப்பினரும் சுக்கிம் தலைவருமான டத்தோ டி. மோகன் கூறினார்.

ரந்தாவ் தமிழ்ப்பள்ளி இன்று மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் போர்ட் எனப்படும் மின்னணு பலகையின் மூலம் இயங்குவதன் மூலம் இச்சாதனையை இப்பள்ளி படைத்துள்ளது.

குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போர்ட் கொண்ட பள்ளியாகவும் இது விளங்குகிறது.

இவ்வேளையில் இப்பள்ளிக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் லின்சுன் பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர்களான டத்தோ சதிஸ்குமார், நடராஜன் முயற்சியில் இப்பள்ளி தற்போது முழுமாக ஸ்மார்ட் போர்ட் வாயிலாக இயங்குகிறது.

இவ்வேளையில் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சாதனையின் மூலம் நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

இப்பள்ளியின் சாதனைகள் தொடர வேண்டும் என டத்தோ டி. மோகன் கூறினார்.

டத்தோ சதிஸ்குமார், நடராஜன் ஆகியோர் ரந்தாவ் தமிழ்ப்பள்ளியோடு நின்று விடாமல் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்ட்களை கொண்டு சேர்க்க வேண்டும்.

இது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset