செய்திகள் மலேசியா
“கட்சியின் எதிர்காலம் கருதி கடினமான இந்த முடிவு எடுக்கப்பட்டது”: முஹைதீன் யாசின்
நீலாய்:
பெர்சத்து கட்சியில் முன்னணி தலைவர்கள் நீக்கப்பட்ட சம்பவம் குறித்து, கட்சித் தலைவர் முஹைதீன் யாசின், தாம் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்தார். எனினும், கட்சியின் போராட்ட நோக்கத்தியும், எதிர்காலத்தையும் கருதி இந்த நடவடிக்கை அவசியமாக எடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஒன்றாக போராட வேண்டியவர்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிச் சென்றதால், ஒழுங்கு நடவடிக்கை தவிர்க்க முடியாததாகி விட்டது” என்றார்.
கட்சிக்கு விதிமுறைகளும் அரசியலமைப்பும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை மீறுவதை அனுமதிக்க முடியாது என்றார். உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, கட்சியின் அரசியலமைப்பை மீறியதாக துணைத் தலைவர் உள்ளிட்ட 17 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், இன்னும் நீக்கங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தனக்கு தகவல் இல்லை என்றும், அது கட்சியின் ஒழுக்கக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வருவதாகவும் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
