செய்திகள் மலேசியா
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அல்-குர்ஆனை மிதித்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
அமலில் உள்ள சட்டத்தின்படி அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாட்டில், உணர்ச்சிபூர்வமான அழுத்தம் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வரும் கருத்துக்கள் அல்ல.
சட்ட செயல்முறையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நாடு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது, உணர்ச்சி மற்றும் ஊகங்களால் அல்ல என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக, அனைத்து தரப்பினரும் இந்த விஷயத்தை முழுவதுமாக அதிகாரிகளிடம் விட்டுவிட வேண்டும்.
பொது நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய ஊகங்களையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிட வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
அரசை கவிழ்க்க சதியா? உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர் சைபுதீன்
March 1, 2026, 10:34 am
