செய்திகள் மலேசியா
மக்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்களை பிறை கிராம சமூக மேலாண்மை மன்றம் தொடர்ந்து முன்னெடுக்கும்: ஸ்ரீ சங்கர்
பிறை:
மக்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்களை பிறை கிராம சமூக மேலாண்மை மன்றம் தொடர்ந்து முன்னெடுக்கும்.
பிறை கிராம சமூக மேலாண்மை மன்றத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் இதனை கூறினார்.
பிறை கிராம சமூக மேலாண்மை மன்றத்தின் பொருளாதார, தொழில் முனைவோர் பிரிவின் முயற்சியின் கீழ் புருவ முடி திருத்துவது குறித்த 1 நாள் திறன் பயிற்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
திறன்களை மேம்படுத்துதல், வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த அதிகாரமளிப்பு திட்டத்தில் பிறை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 20 பெண்கள் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியை ஸ்ரீனேஷ் பிரைடலைச் சேர்ந்த திருமதி ஷமலா நடத்தினார்.
அவர் பங்கேற்பாளர்களுடன் நடைமுறை அறிவு, நடைமுறை நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார்.
திறன் பயிற்சிக்கு அப்பால் எஸ்எஸ்எம் பதிவு, பிபிடிஉரிம விண்ணப்பம், ஸ்பூமி விண்ணப்பத்திற்கான விளக்கமும் இங்கு அளிக்கப்பட்டது.
பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பை வலுப்படுத்துவதற்கும் சமூகத்திற்குள் சிறு வணிக வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் பிறை கிராம சமூக மேலாண்மை மன்றம் உறுதிக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பொன்னுதுரை இந்நிகழ்வை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
அரசை கவிழ்க்க சதியா? உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர் சைபுதீன்
March 1, 2026, 10:34 am
