நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள் மீதான இணைய பாலியல் துன்புறுத்தல்கள்; பாதுகாப்பில் உடனடி சீர்திருத்தம் வேண்டும்: டத்தோ ஹார்டினி ஜைனுதீன்

கோலாலம்பூர்: 

குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் துஷ்பிரயோக வலைப்பின்னல்கள், சட்ட திருத்தங்கள் குறித்து அரசு ஆலோசிக்கும் வரை காத்திருக்காது என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் டத்தோ ஹார்டினி ஜைனுதீன் எச்சரித்துள்ளார்.

அரசு உண்மையில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுக்கும் உறுதிப்பாடு கொண்டதா, போதுமான பயிற்சி பெற்ற நிபுணர்கள் , நிலையான நிதி ஒதுக்கீடு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். 

குற்றவாளிகள்  இணைய சந்தைகளை பயன்படுத்தி இந்த குற்றங்களை புரிவதாக ஹார்டினி தெரிவித்தார்.

பதிவு செய்யப்படாத, ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளே இவர்களின் குறியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆபத்தை முன்கூட்டியே தடுக்க நிரந்தர சிறப்பு பிரிவுகள், இணைய தடயவியல் திறன், சர்வதேச சட்ட நிபுணத்துவம், நீண்டகால நிதி ஆதரவு தேவை என அவர் வலியுறுத்தினார். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு நீண்டகால மனநல சிகிச்சைகள், சட்ட உதவிகள், பாதுகாப்புகள் வழங்கப்படுகிறதா என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset