செய்திகள் இந்தியா
இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்
புது டெல்லி:
இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 32 போலி பல்கலைக்கழகங்களைக் கண்டறிந்து அறிவித்துள்ளது. இதில் 12 பல்கலைக்கழங்களுடன் அதிக எண்ணிக்கையாக டெல்லி முதலிடத்தில் உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு மத்திய அல்லது மாநில அரசுகளின் அங்கீகாரம் எதுவும் இல்லை என்று இந்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் UGC தெரிவித்துள்ளது.
UGC சட்டத்தின் பிரிவு 2(f), 3-ன் படி, இந்நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் வேலைவாய்ப்பு அல்லது மேல்படிப்பு நோக்கங்களுக்கு செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி மோசடிகளில் சிக்காமல் இருக்க பல்கலைக்கழங்களில் சேர்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கீகார நிலையை சரிபார்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், நாட்டின் உயர்கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தவும் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
