செய்திகள் இந்தியா
அனில் அம்பானியின் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை
மும்பை:
ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து அமலாக்கத் துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் பிரமாண்ட பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அந்த பங்களா 66 மீட்டா் உயரமுடையது. மொத்தம் 17 தளங்கள் அதில் உள்ளன. அதற்கு அபோட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.3,716. 83 கோடி ஆகும்.
இதையும் சோ்த்து, அனில் அம்பானிக்கு எதிரான வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
