செய்திகள் இந்தியா
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
டெல் அவிவ்:
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக புதன்கிழமை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
இந்தச் சொற்பொழிவின் மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமையை மோடி பெற்றாா். அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மிக உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தலைவா் அமீா் ஒஹானா மோடிக்குப் பதக்கத்தை அணிவித்தாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:
”நெசெட் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) பதக்கத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பதக்கத்தை பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மரியாதை ஒரு தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை அல்ல, மாறாக இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அளிக்கப்படும் மரியாதை.
இது நமது இரு நாடுகளையும் வழிநடத்தும் பகிரப்பட்ட மரியாதையை பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
