செய்திகள் இந்தியா
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டார்: பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கிறார்
புதுடெல்லி:
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா்ச் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தப் பயணத்தின்போது இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற இருக்கிறாா்.
இந்த நிலையில், இஸ்ரேல் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:
”இன்றும் நாளையும் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். நமது நாடுகள் வலுவான, பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டின் உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன.
பிரதமர் நெதன்யாகுவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்போம். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன்.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் இன்று மாலை உரையாற்றவுள்ளேன். இது நம்மை இணைக்கும் வலுவான நாடாளுமன்ற, ஜனநாயக உறவுகளுக்கு ஒரு மரியாதை. இந்தியா - இஸ்ரேல் நட்பை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்யும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடனும் நான் உரையாடவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின்போது, பிரதமா் மோடிக்கு நெதன்யாகு முறையில் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறாா்.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா்.
மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கொலை செய்துவரும் சூழலில் இந்தியப் பிரதமர் மோடி அங்கு செல்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
