செய்திகள் மலேசியா
2022 முதல் 2025 வரை 175 கைவிடப்பட்ட குழந்தைகள் மீட்பு: சமூக நலத்துறையின் அறிவிப்பு
கோலாலம்பூர்:
2022 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், 175 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, சமூக நலத்துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்ததாவது, குழந்தைகளை கைவிடுதல் அல்லது முறையான பராமரிப்பு வழங்கப்படாமை ஆகியவை 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 17(1)இன் கீழ் பாதுகாப்பு தேவைப்படும் நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டு பாதுகாப்பளிப்பது சமூக நலத்துறையின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட வழக்குகள் மலேசிய அரச காவல்துறையால் விசாரிக்கப்படுகின்றன.
இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த, சமூக சுகாதார கல்விக்கான தேசிய கொள்கையும் செயல்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
இளைஞர்களுக்கான ஆலோசனை, சுகாதார சேவைகள் வழங்கும் 18 ‘இளைஞர் மையங்கள்’ நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக, வாகனங்களின் மூலம் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் சமூகத்தில் இத்தகைய சம்பவங்கள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
