செய்திகள் மலேசியா
ஜனவரி முதல் பிப்ரவரி வரை 7,043 சட்டவிரோத குடியேறிகள் கைதாகி உள்ளனர்: மலேசிய குடிவரவு துறை
புத்ராஜெயா:
ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19 வரை, மொத்தம் 7,043 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு துறை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1,855 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 30,177 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
குடிவரவு துறையின் துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் செல்லுபடியாகும் அனுமதி ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, மியான்மர், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
குடிவரவு சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், சட்ட மீறல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வழங்குமாறும் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
