நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத பட்டாசு விற்பனைக்கு எதிராக சுங்கை பட்டானியில் காவல் துறையின் அதிரடி சோதனை

சுங்கை பெட்டானி: 

உரிமம் காலாவதியான பின்னரும் பட்டாசுகளை விற்பனை செய்ததாக, கோலா முடா பகுதியில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனை நடவடிக்கையில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோலா முடா மாவட்ட காவல் துறை தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்ததாவது, சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட பட்டாசு விற்பனை உரிமம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தும் சில வியாபாரிகள் சட்டத்தை மீறி விற்பனையைத் தொடர்ந்ததாகக் கூறினார்.

நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற சோதனையில், தாமான் ரியா ஜெயா, தாமான் செங்கல் இந்தா பகுதிகளில் உள்ள இரண்டு கடைகள் சோதனையிடப்பட்டன. ஒரு இடத்தில் கடை மூடப்பட்டிருந்தாலும், உரிமம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த பல்வேறு பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. 

மற்றொரு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த கடையில் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு, 1957-ஆம் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset