நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்

கோலாலம்பூர்: 

இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய கணக்காய்வு அறிக்கை (LKAN) 1/2026-இல் மத்திய, மாநில அரசு நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களின் நிதி மேலாண்மையைப் பற்றிய 273 புதிய பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தேசிய கணக்காய்வு துறையின் ஆன்லைன் கண்காணிப்பு பலகை (AGD Dashboard) மூலம் பொதுமக்களுக்களின் பார்வைக்கு வழங்கப்படும் என தேசிய கணக்காய்வு தலைவர், டத்தோ ஸ்ரீ வான் சுராயா வான் முஹம்மத் ரட்சி தெரிவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

“2024 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், இந்த அமைப்பு மூலம் அரசுக்கு RM316.68 மில்லியன் வருமானம் மீட்கப்பட்டு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

“அதில் RM221.52 மில்லியன் மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டதாகும். இதில் அபராதக் கோரிக்கைகள், வாடகை நிலுவை, நில குத்தகை, சுங்கம், வரி வசூல் ஆகியவை அடங்கும்,” என்றார் அவர்.

AGD செயல்படுத்தப்பட்டதன் மூலம் அரசின் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்ததோடு, அரசின் வருமான மீட்பிலும் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதே அறிக்கையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) மாணவர் கட்டண வசூல், செலவினங்களில் கடுமையான முறைகேடுகள் இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

UKM மேற்கொண்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள், பல்கலைக்கழக அரசியலமைப்பின் விதிகளின்படி நிதியமைச்சரின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாக கணக்காய்வு அறிக்கையின் முக்கிய அம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LKAN 1/2026 அறிக்கை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்பட்டு, காலை 10 மணி முதல் தேசிய கணக்காய்வு துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset