செய்திகள் மலேசியா
மொஹைதின் யாசினுக்குப் பதிலாக பெரிக்கத்தான் தலைவராக அஹ்மது சாம்சூரி மொக்தார் நியமனம்
கோலாலம்பூர்:
எதிர்த்தரப்புக் கூட்டணியான பெரிக்கத்தான் நேசனல் (Perikatan Nasional), தனது புதிய தலைவரை அறிவித்துள்ளது.
பாஸ் (PAS) கட்சியின் துணைத் தலைவர் அஹ்மது சாம்சூரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar) தலைவராக நியமிக்கப்பட்டார்.
நேற்று, பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட உச்சமன்றக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் முஹைதின் யாசினின் இடத்துக்குத் திரு அஹ்மது சாம்சூரி வருகிறார்.
2020ஆம் ஆண்டிலிருந்து முஹைதின் யாசின் கூட்டணிக்குத் தலைமை வகித்தார். டிசம்பர் மாதம் விலகுவதாய் அறிவித்தார்.
திரெங்கானு (Terengganu) மாநிலத்தின் முதலமைச்சரான அஹ்மது சாம்சூரி புதிய தலைவராகிறார்.
தற்போது பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் பாஸ் (PAS), பெர்சத்து (Bersatu), கெராக்கான் (Gerakan), MIPP ஆகிய கட்சிகள் உள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
