நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் 12 இலட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: போதைப் பொருள் கும்பலை போலிஸார் அதிரடியாக கைது செய்தது

ஜார்ஜ் டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், போதைப் பொருள் தயாரிப்பு கும்பலை காவல் துறை முறியடித்து, சுமார் 12 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளது. இதன் தொடர்பில் மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில காவல் துறை தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்ததாவது, கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய இந்த சோதனைகள் மறுநாள் காலை வரை நீடித்தன. 
முதற்கட்ட சோதனையில், வடக்கு செபராங் பெரை பகுதியில் உள்ள வீட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மற்றொரு வீட்டில் இருந்து மெதாம்பெட்டமின், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், தென்மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில், போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள், உபகரணங்கள், கலவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மூன்றாவது சோதனையில், இந்த கும்பலுடன் தொடர்புடைய இன்னொரு நபர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர்கள் 37 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள்; அவர்கள் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset