நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்

கோலாலம்பூர்: 

சாலை சேதங்கள் தொடர்பாக மைஜாலான் செயலி வழியாக, 2023 ஆகஸ்ட் முதல் 2026 ஜனவரி வரை 54,055 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பணித்துறையின் துணை அமைச்சர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார்களில் 16,671 (30.8 சதவீதம்) நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள் தொடர்பானவை என்றும், மீதமுள்ளவை பிற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தொடர்பானவை என்றும் அவர் கூறினார். 

அமைச்சகத்தின் கீழ் உள்ள புகார்களில் பெரும்பாலானவை தீர்வு காணப்பட்டுள்ளன; மற்ற துறைகளுக்குரிய புகார்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலைகளில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset