செய்திகள் மலேசியா
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
ஷா ஆலம்:
செமென்யி பகுதியில் உள்ள சுங்கை காபுல் ஆற்றில் ஏற்பட்ட துர்நாற்ற மாசுபாடு தொடர்பான விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில் இருப்பதாக, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
மலேசிய இரசாயனத் துறையிலிருந்து மாதிரி ஆய்வு முடிவுகள் கிடைத்தவுடன், அந்த அறிக்கை துணை அரசுத் தரப்பினரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும்.
இவ்வழக்கில், எண்ணெய் மறுசுழற்சி, பிளாஸ்டிக் கழிவு செயல்பாடுகளில் ஈடுபட்ட இரண்டு தொழில் நிறுவனங்கள் சந்தேகத்தின் கீழ் உள்ளன. மாசுபாடு ஏற்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆற்றில் தீவிர கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மகோத்தா பெரனாங் தொழில்துறை பகுதியில் உள்ள அந்த நிறுவனங்கள், கருப்பு நிற கழிவுநீரையும், எண்ணெய் கழிவுகளையும் வடிகால் வழியாக ஆற்றில் வெளியிட்டதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக இரண்டு விசாரணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்
February 23, 2026, 4:04 pm
