செய்திகள் மலேசியா
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
கோலாலம்பூர்:
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர், 'Bos Pro' அல்லது 'Moo Moo Chat' என்ற செயலி மூலம் முதலீடு செய்ததில் RM664,278 இழப்பைச் சந்தித்துள்ளார்.
74 வயதான அந்தப் பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் ஆலோசகராகவும் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த முதலீட்டு திட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் இந்த முதலீட்டு திட்டத்தில் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், சீனப் பெண் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக வங்சா மாஜு மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் முஹம்மத் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட நபரும் சந்தேக நபரும் 'WhatsApp' மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு 'Moo Moo Chat' முதலீடு குறித்து விவாதித்து வந்தனர்.
“பின்னர், சந்தேக நபர், முதலீடு செய்வதற்காக 'Bos Pro' செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது.
“இந்தச் செயலியின் மூலம், பாதிக்கப்பட்ட நபர் படிப்படியாக 11 வெவ்வேறு வங்கிகளுக்கு, பெயர்களுக்கு மொத்தம் RM668,278 பரிவர்த்தனை செய்துள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜனவரி 30ஆம் தேதி, வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபத்தைப் பெற முடியாததால், பாதிக்கப்பட்டவர் சந்தேகம் அடைந்ததாக கூறினார்.
“அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றவியல் பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்
February 23, 2026, 4:04 pm
