செய்திகள் மலேசியா
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
ஷா ஆலாம்:
முன்னாள் ஆஸ்ட்ரோ அவானி தலைமை ஆசிரியரான அஷ்வாட் இஸ்மாயில், மலேசிய ஒளிபரப்பு துறையின் (Jabatan Penyiaran Malaysia) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் ஷரீஃபா அட்லினா சையத் அப்துல்லாஹ் துணை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த ஃபஹ்மி, அஷ்வாட் , ஷரீஃபா அட்லினாவின் இந்த நியமனமானது நாட்டின் ஒளிபரப்பு துறையின் மாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“புதிய தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயிலுக்கும் துணை தலைமை இயக்குநர் டாக்டர் ஷரீஃபா அட்லினா சையத் அப்துல்லாஹ்வுக்கும் வாழ்த்துகள். இருவரையும் தகவல் தொடர்பு அமைச்சின் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்.
“அவர்களின் தலைமையால், ஒளிபரப்பு துறை மேலும் வலுப்பெற்று, புதுமைகளை ஊக்குவித்து, மக்களுக்கு உண்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தகவல்களை வழங்கும் என நம்புகிறோம்,” என்று அவர் திங்கட்கிழமை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை, ஆஸ்ட்ரோ அவானியில் 19 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, அஷ்வாட் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அஷ்வாட், வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக தனது பதவியை நிறைவு செய்த டத்தோ சுஹைமி சுலைமானுக்கு பதிலாக இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்
February 23, 2026, 4:04 pm
