நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்

2026 மலேசியா சுற்றுலா ஆண்டு (Visit Malaysia Year 2026 – VM2026) தொடங்கிய முதல் மாதத்தில், மலேசிய விமான நிலையங்களில் மொத்தம் 9.4 மில்லியன் பயணிகள்  பதிவாகியுள்ளனர்.

இந்த வளர்ச்சி உலகளாவிய அளவில் மலேசியாவின் ஈர்ப்பு அதிகரித்து வருவதை காட்டுகிறது என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹம்மத் இஸானி கானி தெரிவித்துள்ளார்.

“கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையமும் (KLIA)  பினாங்கு சர்வதேச விமான நிலையமும் (PEN) ஆண்டு வாரியான (YoY) வளர்ச்சியில் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.

“KLIA-வில் 5.9 மில்லியன் பயணிகளின் வருகை பதிவாகி, கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.2 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து PEN-வில் 7,41,183 பயணிகளின் வருகை பதிவாகி, 3.8 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது,” என்று அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், தொடர்ச்சியான உட்கட்டமைப்பு மேம்பாடு, விமான சேவை வலையமைப்பை வலுப்படுத்துதல், அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே மாதிரியான சேவை தரத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், ஆசிய-பசிபிக்கில் மலேசியாவை மிகச்சிறந்த இணைப்பு கொண்ட நாடாக உருவாக்க இலக்கு வைத்துள்ளதாக அவர் கூறினார்.

“பயணிகளின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப திறன், நம்பகத்தன்மை, சேவை தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் முன்கூட்டிய அணுகுமுறையாகும்.

“அதே நேரத்தில், 2026 ஜனவரியில் KLIA டெர்மினல் 1 செயற்கைக்கோள் கட்டிடத்தில் தொடங்கப்பட்ட ‘RIMBA @ KLIA’ இயற்கைத் தோற்றம் கொண்ட ஓய்வு பகுதி, பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

KLIA டெர்மினல் 1-இல் செயல்படுத்தப்பட்ட வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு (VAMs) 99 சதவீத இணக்கம் விகிதத்தை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் பயணிகளை இறக்கவும் ஏற்றவும் உதவும் பகுதிகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதாகவும் மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

“வான்வழி இணைப்பில், ஜனவரியில் குறைந்தது ஆறு புதிய பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஷாங்காய், ஜினான், ஹாங்காங், ஹெஃபெய், குவாங்சோ, ஹார்பின் ஆகிய நகரங்களுடன் மலேசியாவை நேரடியாக இணைக்கின்றன.

“இந்தப் பாதைகள் கோலாலம்பூர், கோத்தா கினபாலு, தவாவ், பினாங்கு போன்ற முக்கிய இடங்களை இணைப்பதுடன், சுற்றுலாத்துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கின்றன,” என்றார் அவர்.

இதற்கிடையில், துர்க்கியில் உள்ள குழுமத்தின் சொத்தான இஸ்தான்புல் சபிஹா கோக்சென் சர்வதேச விமான நிலையம் (ISGIA) 2026 ஜனவரியில் 4.2 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இதில், 2.4 மில்லியன் சர்வதேச பயணிகள், 1.8 மில்லியன் உள்நாட்டு பயணிகள் அடங்குவர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 சதவீத உயர்வாகும்,” என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset