செய்திகள் மலேசியா
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
பாலிக் புலாவ்:
பத்து மாவுங் பகுதியில் உள்ள ஒரு கரோக்கே பொழுதுபோக்கு மையத்தில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனை நடவடிக்கையில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 36 பேரும் மூன்று நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 34 ஆண்கள், பெண்கள், மேலும் இரண்டு உள்ளூர் குடிமக்கள் அடங்குகின்றனர். 22 முதல் 40 வயதுக்குட்பட்ட இவர்களை, குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்காக, பிப்ரவரி 25 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு மாடிகள் கொண்ட கடை வளாகத்தில் இயங்கி வந்த அந்த பொழுதுபோக்கு மையம், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சோதனையிடப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து இயங்கிய அந்த மையத்தில் பணியாற்றியவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களும், வேலை அனுமதியும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்
February 23, 2026, 4:04 pm
