நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்காம் ஆண்டு மெட்ரிக்ஸ் கல்வி அக்டோபர் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சர் ஃபத்லினா

கோலாலம்பூர்: 

நான்காம் ஆண்டு மெட்ரிக்ஸ் கல்வி (Matriks Pembelajaran Tahun 4) இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த மெட்ரிக்ஸ் கல்வி தேர்வு வாரியத்தால் (Lembaga Peperiksaan, LP) நடைப்புறைப்படுத்தப்படவுள்ளது என கல்வி அமைச்சர் ஃபத்லீனா சிடெக் தெரிவித்துள்ளார். 

"ஆசிரியர்கள் இதற்கான கேள்வித்தாள்களைத் தயார் செய்ய தேவையில்லை. இதேபோல், தொடர்புடைய பாடங்களில் ஆண்டு இறுதி பரீட்சை கேள்வித்தாள்களும் ஆசிரியர்களால் தயார் செய்யப்பட தேவையில்லை. மதிப்பீட்டு செயல்முறை முடிந்த பிறகு, மதிப்பெண் சீட்டு LP மூலம் வெளியிடப்படும், பள்ளிகள் அந்த சீட்டுகளை மாணவர்களுக்கு வழங்கலாம்," .

"மெட்ரிக்ஸ் கல்வி கேள்வித்தாள் பதிவேற்றும் செயல்முறை முடிந்த பிறகு, மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும், " என்று அவர் தெரிவித்தார்.

இந்த மெட்ரிக்ஸ் கல்வி மூலம் மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யலாம், இதனால் ஆசிரியர்கள், பள்ளிகள், கல்வித்துறை மாணவர்களின் இலக்கியம், கணிதத் திறன், அறிவியல் திறன்களை வலுப்படுத்தும் துல்லியமான, தீவிரமான திட்டங்களை உருவாக்கலாம்.

"மெட்ரிக்ஸ் கல்வி மூலம் பெறப்படும் தரவுகள் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் தேவைகளைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது. இதனால் மாணவர்களுக்குச் சிறந்த ஆதரவை விரைவாகவும் குறிக்கோளோடும் வழங்க முடியும்," என அவர் குறிப்பிட்டார்.

மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்கள் இந்த மெட்ரிக்ஸ் கல்வியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய வகை சீன, தமிழ் பள்ளிகள் தங்களது மொழி பாடங்களிலும் மதிப்பீடு செய்யப்படும்.

இந்த மெட்ரிக்ஸ் கல்வி நடைமுறைப்படுத்தல் 2026 முதல் 2035-ஆம் ஆண்டு வரையிலான மலேசிய கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset