நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத் திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றத்தை ஒப்புக்கொண்ட முதலாம் படிவம் மாணவன் 

பத்து பஹாட்: 

கடந்த மாதம் வகுப்பில் மாற்றுத்திறனாளி (OKU) மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முதலாம் படிவம் மாணவன் இன்று மஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (SOCCA) 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னர், 13 வயது குற்றம் சாட்டப்பட்டவர் அந்த மாணவர் மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன் வாக்குமூலம் அளித்தார்.

குற்றச்சாட்டின் படி, குற்றவாளி, 16 வயது வயதுடைய OKU மாணவியிடம் ஜனவரி 29 அன்று மதியம் 12 மணிக்கு வகுப்பில் இந்தச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 14(a) படி, குற்றவாளிக்குச் சிறுவயது என்பதால், நன்மைச் சிறப்புச் சான்றிதழ் (bond) கட்டுப்பாடுகளுடன், நியமிக்கப்பட்ட விதிகளை பின்பற்றும் விதத்தில், ஹென்றி கெர்னி பள்ளியில் தண்டனை மேற்கொள்ளப்படுவார்.

பாதிக்கப்பட்டவர் வகுப்பில் தனியாக இருந்த நிலையில் குற்றவாளி வகுப்பின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து அம்மாணவிக்குப் பாலியல் அச்சுறுத்தல் செய்ததாகப் போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு RM1,500 ஜாமீன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset