செய்திகள் மலேசியா
பொருட்கள் நிரம்பிய காரில் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
ஜார்ஜ்டவுன்:
நேற்று இரவு, ஜாலான் பாயா தெருபோங் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில், ஒரு பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் காரின் உள்ளே பல்வேறு பொருட்கள் நிரம்பி, உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இடம் மறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து தமது தரப்புக்கு மாலை 7.48 மணியளவில் அழைப்பு வந்ததாகப் பாயா தெருபோங் தீயணைப்பு, மீட்புப் படை நிலையத்தின் செயல்பாட்டு தளபதி கைருல் அன்னுவார் முஹம்மது ரஹீம் தெரிவித்தார்.
“வாகனத்தின் உள்ளே பொருட்கள் நிரம்பியிருந்ததால் கதவைத் திறப்பதில் மீட்புக் குழுவினர் சிரமம் எதிர்கொண்டனர்.
பின்புற ஜன்னல் உடைக்கப்பட்ட பின்னரே அந்தப் பெண் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் ஓட்டுநர் இருக்கையில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்றார் அவர்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் வாகனத்தில் உடைகள், தலையணைகள், பெட்டிகள், பைகள், உணவுப் பொருட்கள், சில போதைப் பொருட்கள் இருந்ததாகத் தெரியவந்தது.
எனினும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் மேற்கொண்டப் பரிசோதனையில் குற்றச் சம்பவத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரியவந்தது.
பின்னர், சடலம் மேலதிக பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதனிடையே, இரவு 8.30 மணியளவில் தனது மகள் காரில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் போலீசார் தகவல் தெரிவித்ததாக அப் பெண்ணின் தாயார் கூறினார்.
38 வயதான அவரது மகளுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்து, கடந்த 10 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார்.
“உடல்நிலை சரியில்லாததால், அவர் காரில் பல பொருட்களைச் சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சில நேரங்களில் காரிலேயே வசிப்பது போல் தோன்றினாலும், தினமும் வீட்டுக்கு வந்து விடுவார்.
எப்போதும் போல தினமும் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தவர், திடீரென இப்படியொரு சம்பவம் நடந்தது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
