நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“ஷா ஆலாம் இலகு ரயில் சேவை ஜூனுக்கு முன் தொடங்க வாய்ப்புள்ளது”: மலேசிய போக்குவரத்து அமைச்சகம்

கோலாலம்பூர்: 

ஷா ஆலாம் வழித்தட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தின் மூன்றாம் கட்டம் தற்போது இறுதி சோதனை நிலையைக் கடந்து வருகிறது. மொத்தம் 22 ரயில்களில், 14 ரயில்கள் தடையற்ற இயக்கச் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளன; மீதமுள்ள எட்டு ரயில்கள் சோதனையில் உள்ளன.

மலேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது,

தொழில்நுட்பச் சோதனைகள் விரைவாக நிறைவேறினால், இந்த வழித்தடம் ஜூன் மாதத்துக்கு முன்பே இயக்கத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும், சில தொழில்நுட்ப சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. 
பெருந்தொற்று கால தாமதங்களாலும், முந்தைய முக்கிய அமைப்புச் சோதனைகளில் கண்டறியப்பட்ட குறைகளாலும் இந்த திட்டம் பின்னடைவை சந்தித்தது. 

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, தரமான முறையில் திட்டத்தை நிறைவு செய்ய அமைச்சகம் உறுதியுடன் செயல்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset