நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொங்கோட்டில் சுகாதாரக் கிளினிக் குடியிருப்பு பகுதியில் தீ

கினாபடாங்கன்:

தொங்கோட்டில் இன்று காலை நடைபெற்ற தீ விபத்தில் தொங்கோட் சுகாதாரக் கிளினிக் பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பும், மற்றொரு பொதுமக்களின் வீடும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் ஒரு வாகனமும் எரிந்து சேதமடைந்தது. கினாபடாங்கன் தீயணைப்பு நிலையத் தலைவர் ஹைரி உட்டோ கூறியதாவது, நிகழ்வின் புகாரை மாலை 2.40 மணிக்கு பெற்றபோது, ஆறு வீரர்களைக் கொண்ட தீயணைப்பு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 

குடியிருப்பில் இருந்த ஆறு பேர் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டனர். தீயணைப்பு நடவடிக்கைகள் காலை 7.58 மணிக்கு முடிவடைந்தது. குடியிருப்பில் ஒரு வீடு முழுமையாக எரிந்ததுள்ளது (100%); மற்றொரு வீடு சுமார் 25% சேதமடைந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset