நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“நிப்பா வைரஸ்ஸிடமிருந்து மலேசியா தப்பித்தது”: விலங்கு சேவை துறை அறிவிப்பு

கோலாலம்பூர்: 

விலங்கு சேவை துறை அதிகாரிகள் மலேசியா தற்போது நிப்பா வைரஸ்ஸிடமிருந்து தப்பித்த நாடாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

விலங்கு சேவை துறை தொடர்ந்து விலங்குகளின் நோய்களை கண்காணித்து, நாட்டின் நிப்பா வைரஸ் நிலையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டில் 2000 உள்ளூர் பன்றிகள் பரிசோதிக்கப்பட்டு அனைத்திலும் நிப்பா வைரஸ் இல்லாதது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றிச் சந்தையும் கட்டுப்படுத்தி, நிப்பா வைரஸ் இல்லாத நாடுகளிலிருந்து மட்டுமே இறக்குமதி அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் பரவிக்கொண்டிருக்கும் நிப்பா வைரஸ்யின் சம்பவத்திற்குப் பிறகு, நாட்டிற்குள் நோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset