நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்றில் படகு மோதிய விபத்து: இரவு நேரத்தில் மீட்கப்பட்ட மீனவர் உடல்

பொன்தியான்:

பொன்தியான் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாரிட் புகிஸ் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 65 வயதுடைய உள்ளூர் நபரின் உடல், நேற்று இரவு 10.30 மணியளவில் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் டான் சியாங் ஃபூக்கின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாவட்ட காவல் துறை தலைவர் ஹட்ஸ்ரத் ஹுசைன் மியான் ஹுசைன் பொதுமக்கள், ஆற்றங்கரையோரத்தில் மிதந்த நிலையில் உடலை கண்டுபிடித்ததாக அவர் கூறினார். 

ஆரம்ப பரிசோதனையில் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. உடல் மேலதிக விசாரணைக்காக பொன்தியான் அரசு மருத்துவமனை சட்டவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆற்றுப் பாலத்தில் நனைந்த உடையுடன் தனியாக நின்ற 9 வயது சிறுவன், தனது தந்தை ஆற்றில் விழுந்ததாக கூறியதையடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

உயிரிழந்தவர், தனது தத்தெடுத்த மகனுடன் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு ஆற்றில் கிடந்த மரக்கட்டையில் மோதியதால் இருவரும் நீரில் விழுந்தனர். சிறுவன் படகை பற்றிக் கொண்டு உயிர் தப்பிய நிலையில், மற்றவர் நீரில் மூழ்கினர். 

இந்த தேடுதல் பணியில் மலேசிய அரச காவல் துறை, தீயணைப்பு மீட்பு துறை உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset