நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நள்ளிரவில் கோத்த கினபாலு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்களிடையே பதற்றம்

கோத்தா கினபாலு: 

கோத்தா கினபாலு அருகிலுள்ள கடற்பரப்பில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை 12.57 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு மலேசியாவின் சபா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

மலேசிய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட அறிக்கையின் படி, நிலநடுக்கத்தின் மையம் 7.0° வட அகலம், 116.4° கிழக்கு நீளவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

இந்த அதிர்வு சுமார் 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடாட் நகரத்தின் மேற்கு பகுதியில், 678 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சபா மாநிலத்தின் மேற்கு கரையோர பகுதிகளிலும், சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் வதந்திகளை தவிர்த்து அதிகாரப்பூர்வ தகவல்களையே பின்பற்ற வேண்டும் எனவும் வானிலை ஆய்வு துறை அறிவுறுத்தியுள்ளது. 

நிலநடுக்கம் தொடர்பான சமீபத்திய தகவல்களை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், அறிவிப்பு வழிகளில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset