செய்திகள் மலேசியா
வலைவீசும் போது முதலை தாக்கி இறந்த ஆணின் உடல் மீட்கப்பட்டது
கூச்சிங்:
சமராஹான் அருகே சாடோங் ஜெயாவில் உள்ள சுங்கை புலோ பாலத்தின் கீழ் நேற்று வலைவீசிக் கொண்டிருந்தபோது முதலை தாக்கியதாகக் கூறப்பட்ட நபரின் உடல் இன்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையத்தின் பேச்சாளர் 30 வயதான முஹம்மது ஃபைசல் அப்தில்லாஹ் என்பவரின் உடல் இன்று பிற்பகல் 2.22 மணியளவில், தீயணைப்பு கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடல், கட்டுப்பாட்டு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டது.
“முழுமையான உடல் நிலையில் அவர் மீட்கப்பட்டார். ஆனால் வயிற்றுப் பகுதியில் கடித்த காயங்கள் காணப்பட்டன. பின்னர் உடல் மேலதிக விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் (SAR) மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் அசாஜயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் பங்கேற்றனர்.
அவர்களுடன் அரச மலேசிய போலீஸ் படை (PDRM), குடிமக்கள் பாதுகாப்புப் படை (APM), சரவாக் வனத்துறை (SFC), RELA, UKPS, கிராம மக்களும் உள்ளூர் மீனவர்களும் உதவி செய்தனர்.
நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் தனது நண்பருடன் ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் இடுப்பு வரை நீரில் இறங்கி வலைவீசிக் கொண்டிருந்தபோது திடீரென முதலை தாக்கியது.
சம்பவத்தைப் பார்த்த நண்பர் உடனடியாக உதவிக்காக முயன்றதுடன் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
