செய்திகள் மலேசியா
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
கோத்தா பெலுட்:
நேற்று இரவு கம்போங் பித்துரு லாவுட் பகுதியில், நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பிலிருந்து தப்பினர்.
இந்த விபத்தில் 44, 40 வயதுடைய கணவன்-மனைவியும் அவர்களது நான்கு முதல் 10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
இரவு 8.01 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கோத்தா பெலுட் மாவட்ட தீயணைப்பு, மீட்பு நிலைய (BBP) தலைவர் எல்கே பாகுக் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எட்டு தீயணைப்பு வீரர்கள் ஒரு தீயணைப்பு வாகனம், அவசர மருத்துவ சேவை (EMRS) வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“சம்பவ இடத்துக்கு வந்தபோது, இஸுசு டி-மேக்ஸ் வகை காரில் பயணித்த ஐந்து பேர் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தோம்.
தீயணைப்பு குழு வருவதற்கு முன்பே, பொதுமக்களின் உதவியுடன் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்ததால், EMRS குழு முதலுதவி அளித்து, பின்னர் கோத்தா பெலுட் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மீட்பு நடவடிக்கை இரவு 9.07 மணிக்கு முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:04 am
