செய்திகள் மலேசியா
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
புத்ராஜெயா:
மதப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து மத நடவடிக்கைகளும், வழிபாட்டுத் தலங்களை கட்டுவதும், அரசின் விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்டு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அரசு எந்த மதத்தின் வழிபாடுத் தலங்களையும் அல்லது பிரசார நடவடிக்கைகளையும் தடை செய்யவில்லை என்றாலும், நடைமுறை விதிகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சக ஊழியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
வழிபாடு எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் அல்லது வழிபாட்டுத் தலங்களை எங்கும் அமைக்கலாம் என்ற எண்ணம் தவறானது என்றும், விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இஸ்லாம் மலேசியாவின் கூட்டாட்சி மதமாக இருந்தாலும், அதனை காரணமாகக் கொண்டு பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என்றும், அதேபோல் எந்த மதமும் மற்ற மதங்களை அவமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்பதே நாட்டின் அமைதிக்கு அடிப்படை என அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
