நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாவது பிறந்தநாளில் கொடூர கொலைக்கு பலியான சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது

குவாந்தான்: 

நேற்று தாமான் செராட்டிங் டாமாய் பகுதியில் நடந்த கொடூர கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல், இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அவரின் இரண்டாவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 பிப்ரவரி 18-ஆம் தேதி பிறந்த நூர் சுமய்யா ஹுமைரா, தனது தந்தையால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

மேலும், அவரது 5 வயதுடைய அக்கா நூர் சஃபியா ஹுமைரா, 55 வயதுடைய பாட்டியின் உடல்களுக்கும் இன்று காலை 8.45 மணியளவில், 'Hospital Tengku Ampuan Afzan' மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டது.

இந்தப் பரிசோதனை மதியம் 1 மணிக்கு பின் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், அனைத்து உடல்களும் இன்று மாலை செராட்டிங் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளன.

சிறுமியின் தந்தை, தாயின் உடல்களுக்கு நேற்று பிரேத பரிசோதனை முடிவடைந்தது.

நேற்று காலை சுமார் 7 மணியளவில், ஒரே மாடி கொண்ட வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இரண்டு குழந்தைகள், பாட்டி, 32 வயதுடைய தந்தை 28 வயதுடைய தாய் அடங்குவர்.

பாஹாங் மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹாயா ஒத்மான் சந்தேகநபர் கத்தியை பயன்படுத்தி தனது மனைவி, இரண்டு குழந்தைகள், தாய் ஆகியோரைக் கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டாதகத் தெரிவித்தார்.

முன்னதாக, சந்தேகநபர் கிள்ளான், சிலாங்கூர் பகுதியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும், இந்த மாத தொடக்கத்தில் குவாந்தானில் பாதுகாப்பு பணியாளராக வேலை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் நிதி சிக்கல் என நம்பப்படுவதுடன், சந்தேகநபருக்கு மனநல சிகிச்சை தொடர்பான எந்த பதிவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset