செய்திகள் மலேசியா
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
கோலாலம்பூர்:
எல்.ஆர்.டி கிளானா ஜெயா, கோம்பாக் நிலையம், அம்பாங் பார்க் நிலையம் இடையே ஏற்பட்ட சிக்னல் கோளாறால் இன்று காலை ரயில் சேவை தாமதமடைந்தது.
இதன் காரணமாக, கோம்பாக் நிலையத்திலிருந்து கேஎல்சிசி நிலையம் வரை தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த இடையூற்றை சமாளிக்க மாற்று ரயில்களும், இலவச இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. புத்ரா ஹைட்ஸ் நிலையத்திலிருந்து வரும் ரயில்கள் பசார் செனி நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, ஆறு நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்பட்டது. பசார் செனியில் இருந்து கேஎல்சிசி நிலையங்களுக்கு இடையில் இணைப்பு ரயில்கள் இருபது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.
இதனிடையே, கோளாறை விரைவில் சரிசெய்ய பொறியியல் குழு சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்தது.
பயணிகள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்தவும், சேவை நிலவரத்தை ரேபிட் கேஎல் சமூக ஊடகங்களில் அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
