நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

திரெங்கானு:

செத்தியு பகுதியில் உள்ள சுங்காய் மெராங் ஆற்றுமுகம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் ஆழமின்றி காணப்படுவதால், 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும், சுற்றுலா படகுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலை காரணமாக, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பல சமயங்களில் படகுகளை பல அடி தூரம் தள்ளிச் சென்ற பிறகே கடலுக்குள் செல்ல முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் தினசரி வருமானம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக கடலுக்குச் சென்று வரும் மூத்த மீனவர்கள், இவ்வாண்டு நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதாக கூறுகின்றனர். சில நேரங்களில் நீரெழுச்சி வரும் வரை பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழல், திரெங்கானு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய அறைகூவலாக மாறி வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset