நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலம்: 

செக்‌ஷன் 7 ஷா ஆலம் பகுதியில் தலையில் துணியை அணிந்து, பெண் போல வேடமிட்டு வீடு புகுந்த சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பொது பல்கலைக்கழக மாணவியான பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருந்த அவர், வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்ததும், வீட்டின் உள்ளே பொருள்கள் சிதறியிருந்ததும் கண்டறியப்பட்டது.

சிசிடிவி பதிவில், காலை நேரத்தில் கைப்பையுடன் ஆடவர் ஒருவர் தலையில் துணியை அணிந்து வீட்டிற்குள் நுழைந்தது பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபரை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset