செய்திகள் மலேசியா
இரண்டு நாட்களாகக் காணாமல் போன ஆண்; தேடுதல்–மீட்பு நடவடிக்கை தொடக்கம்
கோலா க்ரா:
கடந்த திங்கட்கிழமை முதல் கம்போங் கன்டேக், டாபோங் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பாததால், ஒரு ஆண் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.54 மணிக்கு முகமது சைஃபுவான் சே மூட் (38) காணாமல் போனதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேடுதல், மீட்பு நடவடிக்கை (SAR) தொடங்கப்பட்டது என்று டபோங் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் (BBP) மூத்த தீயணைப்பு அதிகாரி II ஸைமி சமாட் கூறினார்.
முகமது சைஃபுவானின் இளைய சகோதரர் வழங்கிய தகவலின்படி, அவர் பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியிலிருந்து இன்று வரை வீட்டிற்குத் திரும்பவில்லை.
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் டபோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் இரண்டு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
“தேடுதல் பகுதி முஹம்மது சஃபுவான் வழக்கமாகச் செல்லும் பாதைகளை உள்ளடக்கியுள்ளது. கிராம மக்களும் கூட இந்த நடவடிக்கைக்கு உதவி வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கை மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் நடைபெற்று வருவதுடன், மாலையில் நாய் கண்டறியும் பிரிவு (K9) இணைந்து தேடுதல் பகுதி விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
