நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டாசு வெடித்ததில் இடது கால் துண்டான இளைஞர்

செகாமாட்: 

தாமான் டாமாய் ஜெயா, புக்கிட் சிப்புட் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்ததில், ஒரு ஆணின் இடது கால் துண்டிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்தது. 30 வயதான அந்த நபர் பட்டாசு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

செகாமாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முஹம்மது ஜுமசன்சாஹிர் செக் இஸ்மாயில் கூறுகையில், சீன புத்தாண்டை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர் ‘Shoot Cake 4(D) 16 Shot (Premium)’ வகை பட்டாசுகளை வீட்டின் முன்பு வெடிக்கச் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது என செகாமாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முஹம்மது ஜுமசன்சாஹிர் செக் இஸ்மாயில் கூறினார்.

இந்த வெடிப்பின் காரணமாக அவர் கடுமையாகக் காயமடைந்து இடது கால் முழங்காலுக்கு கீழ் துண்டிக்கப்பட்ட நிலையில், உடனடியாக செகாமாட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

“தற்போது அவர் சிவப்பு பிரிவில் (Red Zone) வைத்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவரின் இடது கால் முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இந்த வழக்கு 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் 6 ,8 ஆம் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset