செய்திகள் மலேசியா
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
பாகான் செராய்:
பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து பலரும் திரும்புவதனால், நாளை முதல் முக்கிய விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு ஆணையத் துறை இயக்குனர் முஹம்மது ஹஸ்புல்லா அலி தெரிவித்ததாவது,
வடக்கு, தெற்கு பகுதிகளிலிருந்து தலைநகரை நோக்கி வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க, ஒப் செலாமட் நடவடிக்கையின் கீழ் 10,000 போலீஸ் அதிகாரிகள், சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியமர்த்தப்படுகின்றனர்.
காலை முதல் இரவு வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் முன்திட்டமிட்டு பயணிக்கவும், நெரிசல் நேரங்களை தவிர்க்கவும், பணியில் உள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விபத்து அல்லது வாகனக் கோளாறு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும், நெடுஞ்சாலை நிர்வாகங்களின் தகவல்கள் ஊடகங்களில் தெரிந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
